ஒரே நாளில் வெள்ளையாகனுமா? கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி பத்து நிமிடத்தில் கழுவுங்க?
கற்றாழை இயற்கை கொடுத்த அற்புத மூலிகை. கற்றாழையின் இலை பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது.
இதில் 20 அமினோ அமிலங்கள், ஏ, ஈ ,சி , கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.
உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது.
இன்று நாம் முக அழனை அதிகரிக்க எப்படி கற்றாழையை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
கற்றாழை ஜெலுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறையும்.
கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து , பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நாளடைவில் சரும நிறத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.