நீரிழிவு நோயாளிகள் பேரீச்சை பழம் சாப்பிடலாமா? இதோ உண்மை தகவல்
நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு.
பேரீச்சை பழம்
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். காரணம் என்னவெனில் உடம்பில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பாரிய பிரச்சினையை ஏற்படுத்துவதே காரணமாகும்.
மேலும் நீரிழிவு நோயாளிகள் சில பொருட்களை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. அந்த வகையில் பேரீச்சை பழத்தினை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம்? என்ற கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.
பேரீச்சை பழத்தில் இரும்புச்சத்து மற்றும் சர்க்கரை சத்து இருந்தாலும், நார்ச்சத்தும் அதிகமாகவே இருக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் பேரீச்சை பழத்தினை குறிப்பிட்ட அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.
ஆனால் அதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நார்ச்சத்து தேவை என்பதால் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கூறப்படுகிறது.