புற்றுநோய் வரமால் இருக்கணுமா! வேப்பிலை உருண்டை சாப்பிட்டாலே போதும்
புற்றுநோய் திசுக்களை நம் உடலுக்குள் வரவிடாமல் இருக்க வேப்பிலை உருண்டைகளை சாப்பிட்டாலே போதும். அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வேப்பிலை ஏன் சாப்பிட வேண்டும்?
பாரம்பரியமான மருத்துவ நலன்கள் கொண்ட இந்த வேப்பிலையை நாம் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். வயிற்று தொற்று நோய்களை தீர்ப்பதற்கு வேப்பிலை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். வயிற்றில் தொற்று இருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணமே பாக்டீரியா தான்.
அதற்கு நாம் காலையில் வேப்பிலை உருண்டையும், மஞ்சள் உருண்டையும் சாபபிட்டாலே போதும். நாம் வேப்பங்கொழுந்து இலைகளை நன்றாக அரைத்து உருண்டையாக சாப்பிடும் போது, உணவுக்குழாயில் தொடங்கி, வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றை சுத்தப்படுத்தும். மேலும், நமது வெப்பத்தை சீராக்கி சமநிலைப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல், உடலில் ஏற்படும் பலவித அலர்ஜிக்கு வேப்பிலை ஒரு நல்ல நிவாரணம். வேப்பிலையை நன்றாக அரைத்து உடலில் பூசி ஊறவைத்த பின்னர் ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனால், உடலில் எந்தவித அலர்ஜியும் ஏற்படாது.
எப்படி சாப்பிட வேண்டும்?
தினமும் காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து உருண்டையாக பிடித்து சாப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைக்க கூடாது. இரண்டையும் தனியாக அரைத்து உருண்டை பிடித்து சாப்பிட வேண்டும். அதற்கு பின்பு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிட கூடாது.
வேப்பங்கொழுந்தில் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதை மீறியும், கசப்பாக இருந்தால் சிறிது தேனில் நனைத்து நாக்கில் படாமல் தொண்டையில் விழும்படி சாப்பிடுங்கள். இதனால் உங்களுக்கு புத்துணர்ச்சியும், அதிக சக்தியும் கிடைக்கும்.
புற்றுநோயை தடுக்கும் வேப்பிலை
நமது உடலில் இருக்கும் சாதாரண திசுக்கள், உயிர்வாழ்வதற்கு பெற்றுக் கொள்ளும் உணவை விட புற்றுநோய் திசுக்களுக்கு நூற்று ஐம்பது முறை உணவு வேண்டும். நாம் என்ன தான் மருத்துவம் அளித்தாலும் மீண்டும் அந்த திசுக்கள் முளைத்துக் கொண்டே தான் இருக்கும். இதை தடுப்பதற்கான வழி உண்ணாவிரதம் இருப்பது தான்.
அப்படி நாம் உணவு சாப்பிடாமல் இருக்கும் போது திசுக்களுக்கு களைப்பு ஏற்படும். அதுவே, நீண்ட நேரமாக இருந்தால் புற்றுநோய் திசுக்கள் மெதுவாக மடிந்துபோகும்.
மேலும், இந்த புற்றுநோய் திசுக்கள் நமது உடலில் சிறிய அளவில் இருக்கும் போது அதை நாம் வேப்பிலையின் மூலம் அழித்து விடலாம். காலையில் நாம் வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அது புற்றுநோய் திசுக்களை வளரவிடாமல் தடுக்கும்.
ஆனால், நீங்கள் புற்றுநோய் வந்த பிறகு வேப்பிலையை சாப்பிடுவதில் பயன் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |