சேர்ந்து வரும் 2 ராஜயோகங்கள்: பணக்கட்டை எண்ணப்போகும் ராசிகள் எவை?
கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி ஒவ்வொரு ராசிக்கும் தகுந்த பலனை கொடுக்கின்றது என்பது நம்பிக்கையாகும். இதனால் வேத சாஸ்திரம் முக்கியம் பெறுகின்றது.
சில சமயங்களில் ஒரே வேளையில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகும். இது ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
இது க்கிரன் மற்றும் புதனால் உருவாகும். இப்படி இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இதனால் பயன்பெறும் ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் வரும். வணிகர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கலாம். இதன் மூலம் பெருமளவில் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு சிறப்பான காலம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். |
கன்னி | கன்னி ராசிக்காரர்களுக்கு ஸ்ரீதொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சி. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலையில் வெற்றி. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். |
மகரம் | மகர ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகமானது மங்களகரமான பலன்களை அளிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். அரசு தொடர்பான வேலை வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).