கங்கை ஆற்றை அடுத்து யமுனை ஆற்றிலும் குவிந்த சடலங்கள்; பீதியடைந்த மக்கள்
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் கொரோனா வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இதன் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பல தகன மயானங்களில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்படியே ஆற்றில் விட்டு விடுகின்றனர்.
கங்கை ஆறுகளில் மிதந்து வரும் சடலங்களை நாய்கள் கடித்து குதறி சேதப்படுத்துகின்றன ஏற்கனவே, கங்கை ஆற்றில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்த நிலையில் தற்போது யமுனை ஆற்றிலும் ஏராளமான உடல்கள் மிதக்க விடப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர்.
மேலும், இறந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார்.