சமையலுக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தாதீங்க.. மோசமான விளைவு ஏற்படும்
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நாம் கவனமாக தெரிவு செய்ய வேண்டும். இந்த பதிவில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்யை தெரிந்து கொள்வோம்.
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யில் ஊட்டச்சத்தைவிட பாதிப்பு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் நேரடியாக இரத்தத்தையும், இதயத்தையும் தாக்கி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள்
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கார்ன் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை பல உடல்நலக் கோளாறை ஏற்படுத்துகின்றது. ஆதலால் இதனை தவிர்ப்பது நல்லது.
ஒமேகா 6 உள்ளடக்கம் உள்ளதால் சோயாபீன் எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எண்ணெய் பிரபலமாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இன்று பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய்யில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அதிக புகை புள்ளி மற்றும் வைட்டமின் ஈ உள்ளடக்கத்திற்காக பரவலாக பயன்படுத்தபடும் ரைஸ் பிரான் எண்ணெய் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை கொண்டுள்ளது. அதிகமாக உட்கொள்ளும் போது, உடலில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இடையே உள்ள சமநிலையை சீர்குலைத்து, வீக்கம் மற்றும் பிற உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் பாமாயில் சுகாதாரத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆபத்தாக கருதப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதுடன், இதனை உட்கொள்ளும் போது இதய நோய் அபாயம் ஏற்படுகின்றது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிக்கப் பயன்படும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், அவற்றின் டிரான்ஸ் கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த எண்ணெய்களை உட்கொள்வது இதய நோய் மற்றும் பிற உடல்நல சிக்கல்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |