சனி பெயர்ச்சி பலன்கள்: இரண்டரை ஆண்டுகள் ராஜவாழ்க்கை வாழும் 3 ராசிகள் யார் யார்னு தெரியுமா?
சனி பெயர்ச்சியின் காரணமாக அனைத்து ராசிகளும் சில மாற்றங்களை சந்திக்கும் நிலையில், குறிப்பிட்ட சில ராசியினருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்கின்றது.
சனி பெயர்ச்சி
ஒன்பது கிரகங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தை சனி கிரகம் பிடித்துள்ளது. அதாவது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களை சனி பகவான் கொடுப்பார்.
சனி திசை மற்றும் ஏழரை சனி வாழ்க்கையில் மகிழ்ச்சி, துன்பம் இவற்றினை கொண்டுவரும் நிலையில், சனி மகிழ்ச்சியடையும் போது ஆசீர்வாதங்கள் அதிகமாக கிடைக்குமாம்.
மெதுவாக நகரும் சனி கிரகமானது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது.
வரும் 2027ம் ஆண்டு, சனி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். சனி பெயர்ச்சியினால் பல ராசியினருக்கு வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் நிலையில், மூன்று ராசியினர் மட்டும் உச்சக்கட்ட பலன்களை அடைகின்றனர்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு சனி பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் ஏற்படுவதுடன், முடியாமல் நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் நிறைவுறும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன், கடன் பிரச்சனையிலிருந்தும் விடுபடுவீர்கள். செல்வம் வெற்றி அடுத்தடுத்து வரக்கூடும்.

தனுசு
தனுசு ராசியினர் இந்த சனிபெயர்ச்சியினால் நல்ல அதிர்ஷ்டம் பிரகாசிப்பதுடன், தொழில் பிரச்சனையும் முடிவிற்கு வருகின்றது. கடன் சுமை நீங்கி நிதி நிலைமை வலுவடைவதுடன், நீண்ட கால மன அழுத்தம், சிக்கல்களிலிருந்து விடுபடவும் செய்வீர்கள்.

கும்பம்
கும்ப ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியானது மிகவும் சிறப்பானதாக இருக்கின்றது. மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் சனியானது, கும்ப ராசி ஏழரை சனியிலிருந்து முழுமையாக விடுபடவும் செய்கின்றார்.
இதனால் கடன் பிரச்சனை, நீண்ட நாள் மன அழுத்தம் அனைத்தும் முடிவிற்கு வரும், முன்னேற்றத்திற்கான பாதைகள் கிடைக்கப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
ஏழரை சனி காலத்தில் பாதிப்பு குறைவதற்கு சனி சாலிசா, அனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்தால் சனியின் அருளை பெற முடியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |