100 ஆண்டுகள் கழித்து உருவாகும் யோகம்: ஜாக்பாட் அடிக்கும் அந்த 3 ராசி யார்?
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தினால் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசியினரை இங்கு தெரிந்து கொள்வோம்.
சதுர்கிரக யோகம்
ஜோதிடத்தில் கிரகங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது சில சுப மற்றும் அசுப பலன்கனை உருவாக்கும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் வரும் 23ம் தேதியில் மீன ராசிக்கு செல்கின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு, புதன், சுக்கிரன் பயணிக்கும் நிலையில், செவ்வாயும் செல்வதால் சதுர்கிரக யோகம் உருவாக உள்ளது.
இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் நிகழ்வதால் சில ராசியினர் அதிர்ஷ்டத்தில் பிரகாசிப்பார்கள். அந்த 3 ராசியினர் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
கடகம்
கடக ராசியில் 9வது வீட்டில் இந்த யோகம் உருவாகவுள்ளதால், குறித்த ராசிக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதுடன், பரம்பரை சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்பும் உள்ளது.
வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கை இன்னும் சிறப்பாகவும் இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளது.
மிதுனம்
சதுர்கிரக யோகம் மிதுன ராசியில் 10வது வீட்டில் இருப்பதால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாகனம், சொத்து வாங்க வாய்ப்புள்ளது.
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை இக்காலத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியில் 4வது வீட்டில் இந்த யோகம் உருவாக உள்ளதால், தொழில் ரீதியான முன்னேற்றம், புதிய வாகனம், சொத்து வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயமும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கும்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |