இந்த கிழமைகளில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்!
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமான அவர்களின் விசேட ஆளுமைகள் மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்துவதை போல் அவர்கள் பிறந்த கிழமையும் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் வாரதின் 7 கிழமைகளும் முக்கிய 7 கிரகங்களால் ஆளப்படுவதாக நம்பப்படுகின்றது. அதன்பிகாரம் எந்த கிழமைகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எவ்வாறான குணங்களையும் ஆளுமை பண்புகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

விசேட ஆளுமைகள்
ஞாயிறு - ஞாயிற்றுகிழமை சூரிய பகவானுக்குரிய நாள் என்பதால், இந்த கிழமையில் பிறந்திருந்தவர்கள் இயல்பிலேயே தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இளமையில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும், 40 வயதுக்கு மேல் சகல இன்பங்களையும் பெற்று, ஆடம்பர வாழ்க்கையை அனுப்பார்கள்.
ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிடும் குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களை அடக்கியாளுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

திங்கள் - திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. இந்த திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு காதல் மற்றும் திருமண விடயங்களில் ஈடர்ப்பு சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் நல்ல பெயர் மற்றும் புகழுடன் அனைவரும் மதிக்கும்படியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
செவ்வாய்- செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.
போர் கிரகமான செய்யவாயால் ஆளப்ப்படுவதால், இலக்குகளை அடைய வேண்டும் எனபதில் உறுதியாக இருப்பார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஆரம்பித்த விடயத் பாதியிலேயே விட்டுவிடும் குணம் துளியும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

புதன்- புதன்கிழமை புதன் பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் சகல துறை சார்ந்த அறிவையும் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உலகத்து அறிவு சிறப்பாக இருக்கும்.
இந்த கிழமையில் பிறந்தவர்கள் படிப்பில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ளும் விடயத்தை அவர்கள் இரண்டு மூன்று நாட்களிலேயே கற்றுக்கொள்வார்கள்.
இவர்கள் தேவையில்லாத பிரச்சனையில் அவ்வளவு சீக்கிரம் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். தானாக வரும் பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
வெள்ளி - வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உரிய நாள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருப்பார்கள்.
இவர்கள் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள். விரும்புவதை அடையும் வரையில் ஓயவே மாட்டார்கள். ஆடம்பர பொருட்கள் மீது இவர்களுக்கு இயல்பிலேயே அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்
அவர்கள் எவ்வளவு உழைத்தாலும், அது மற்றவர்களையே போய் சேரும். குறிப்பாக இந்த கிழமையில் பிறந்த பெண் குழந்தைகள் வளர வளர செல்வம் வீட்டில் பெருகிக் கொண்டே இருக்கும்.

சனி - சனிக்கிழமை சனி பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு விஷயத்தில் ஆரம்பத்திலேயே சோம்பேறித்தனப்பட்டால், அதனை செய்து முடிக்கவே மாட்டார்கள். அதுவே ஒரு விஷயத்தை ஆர்வமுடன் செய்தால், வெற்றி நிச்சயம்.
அவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் விசுவாசமான நட்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |