“இது ஆரம்பம் மட்டுமே” சேலையுடன் உடற்பயிற்சி செய்யும் பெண்!
ஜிம்மில் சேலைக்கட்டிக்கொண்டு உடற்பயிற்சி இளம் பெண்ணின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.
தற்போது பெண்களும் ஆண்களுக்கு சரிசமமாக ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களும் செய்து வருகின்றனர்.
மேலும், பெண்கள் அவ்வப்போது ஸ்டண்ட், பைக் ஓட்டுதல், கபடி விளையாடுவது போன்ற செயல்களை சேலை அணிந்துக்கொண்டு அசாதாரணமாக சில செயல்களை செய்வது போல பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதுபோல ஜிம்மில் அதிக வசதிக்காகவும் எளிதாகவும் உடற்பயிற்சி செய்யும் போது மக்கள் பெரும்பாலும் தடகள ஆடைகளை அணிவார்கள். ஆனால் ஜிம்மில் ஒரு பெண் சேலை அணிந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கின்றார்.
சேலையில் உடற்பயிற்சி
ஒரு பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சில இணைய பயனர்களை கவர்ந்து வருகிறது.
உடற்பயிற்சிகள் தொடர்பான உள்ளடக்கத்தை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் உடற்பயிற்சி ஆர்வலரான ரீனா சிங் என்பவரால் இந்த சிறிய வீடியோ Instagram இல் பதிவேற்றப்பட்டது.
961,000 க்கும் அதிகமான விருப்பங்களையும் 33 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்ற அவரது புகைப்படத்தில் "இது ஆரம்பம் மட்டுமே" என்று தலைப்பிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் இப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.