56 வயதில் சேலையுடன் உடற்பயிற்சி செய்யும் தமிழ் பெண்! பிரத்யேக பேட்டி
சென்னையை சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலை கட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகள் வைரலானது.
Humans Of Madras என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ வைரலானது.
அதில், அவரது வயது 56 ஆகிறது, அதனால் என்ன?
சேலையை அணிந்து கொண்டு மிக எளிதாக பவர் லிப்ட் மற்றும் புஷ்அப் செய்கிறார்.
வயது வெறும் எண் தான், மனதால் இளமையானவர், மருமகளுடன் சேர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கால் மற்றும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணை அவரது மகன் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தியதால் மருமகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்ததன் விளைவாக வலியில் இருந்து மீண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.