எடையை மின்னல் வேகத்தில் குறைக்கனுமா? அப்போ இந்த ரசம் குடிக்கலாம்!
பொதுவாக எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு.
ஒவ்வொருநாளும் தினமும் கண்ணாடியைப் பார்க்கும் போது ஏன் இப்படி உடல் எடை ஏறிக்கொண்டே போய்கொண்டிருக்கிறது என்று அதிக கவலை வந்துக்கொண்டுதான் இருக்கும்.
இந்த உடல் எடையால் பலரின் கேலிக்கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்போம். சிலர் இந்த உடல் எடையைக் குறைப்பதற்கு பல பல வழிகளில் முயற்சித்து சோர்வடைந்திருப்பார்கள்.
ஆனால் மருந்து மாத்திரை எதுவும் இல்லாமல் ஒரு வீட்டு வைத்தியதிலேயே உங்கள் எடையை குறைக்கலாம். அது என்ன ரசம் தெரியுமா? ரெசிபி இதோ,
image: scitechdaily
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1 கிண்ணம்
தேங்காய் – 2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
பூண்டு- 2
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
புளி கரைசல் 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பீட்ருட், உளுத்தம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை மா பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை சூடேற்றி எண்ணெய்யில் கருவேப்பிலை, வெங்காயம், சீரகம் என்பவற்றை தாளித்து புளிக்கரைசலை சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைத்தப்பிறகு பீட்ரூட் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் பீட்ரூட் ரசம் தயார்.
இந்த ரசத்தை உடல் எடையை குறைக்க நினைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த பீட்ரூட் ரசத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் உடைக்குறைக்கலாம்.