சூடான கோதுமை வெங்காய மிளகு தோசை செய்வது எப்படி?
நீரிழிவு நோயாளிகள் எளிதில் செரிமானம் செய்யக் கூடிய உணவாக கோதுமை இருக்கிறது.
இன்று சூடான கோதுமை வெங்காய மிளகு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- அரிசி மாவு - 1/2 கப்
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மிளகு சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, பொடித்த மிளகு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்க வேண்டும்.
இப்போது சூடான கோதுமை வெங்காய மிளகு தோசை ரெடி!!!