காடு போல் முடியை வளர வைக்கும் கறிவேப்பிலை.. இனி யாரும் ஒதுக்காதீர்கள்
Curry Leaf
Hair Growth
By DHUSHI
பொதுவாக தலைமுடி உதிர்வு பிரச்சினை தற்போது இருக்கும் பெண்களுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினை ஊட்டசத்துக்கள் குறைப்பாடு, முறையான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
அந்த வகையில் இது போன்ற பிரச்சினைகளை கறிவேப்பிலை சரிச் செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் ஊட்டசத்துக்கள் இது போன்ற பிரச்சினைகளை வேறுடன் இல்லாமாக்குகிறது.
இதன்படி, கறிவேப்பிலை எவ்வாறு தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
கறிவேப்பிலையால் ஏற்படும் நன்மைகள்
- தேவையானளவு கறிவேப்பலை எடுத்து, அதனை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தினமும் தலையில் தடவி வந்தால் காலப்போக்கில் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
- இரவு தூங்குவதற்கு முன்னர் ஒரு பவுலில் கறிவேப்பிலை எடுத்து ஊற வைத்த விட்டு காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் எண்ணற்ற நோய்கள் குணமாகுவதுடன், கால்சியம் சத்து உடலில் அதிகரிக்கப்படும்.
- அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று நினைப்பவர்கள் கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஷாம்புவுடன் சேர்த்து தலையில் தடவி வந்தால் காலப்போக்கில் இளம் நரை பிரச்சினை சரியாகி விடும் மற்றும் தலைமுடியும் அடர்த்தியாக வளரும்.
- வாரத்திற்கு இரண்டு தடவைகள் கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் தலைமுடி உதிர்வு குறையும்.
-
நெல்லிக்காயுடன், கறிவேப்பிலை, அருகம்புல் என்பவற்றை சேர்த்து ஜுஸ் போன்று செய்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழுவது குறையும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US