Computer keyboardஇல் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?
தற்காலத்தில் கணினியின் உதவியின்றி எந்த வேலையும் செய்யமுடியாது எனும் அளவுக்கு தொழிநுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது.
முன்னைய காலத்தில் பலர் ஒன்றாக சேர்ந்து செய்த வேலையை இன்று கணினி தன்னிச்சையாகவே செய்கின்றது.
பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், நகைக்கடைக்காரர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் பொருட்களை வடிவமைக்கவுமம் (Design & Animation) மற்றும் தயாா் செய்யவும் கணினி இன்றியமையாத விடயமாகிவிட்டது.
ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் ஆராய்ச்சி, சொல் முறைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிவர்த்தனையை மின்னஞ்சல் (E - Mail) மூலமாக அனுப்பவும் கணினிகளில் தங்கியிருக்கும் நிலை உருவாகிவிட்டது.
இதனால் அனைத்து வேலைகளிலும் கணினி முக்கிய இடம்வகிக்கின்றது. கணினிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் விசைப்பலகை (key board) மிகவும் முக்கியமாகின்றது.
இந்த கீபோர்ட் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விடயம் குறித்து இந்த பதிவில் தொரிந்துக்கொள்வோம்.
விசைப்பலகை (key board) இல் பல பட்டன்கள் இருந்தாலும் F மற்றும் J பட்டன்களில் மாத்திரம் விசேடமாக சிறிய கோடுகள் இருக்கும். இது எதற்காக என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? பெரும்பாலோனவர்கள் இந்த 2 கோர்டுகளை கவனித்திருக்கமாட்டீர்கள்.
ஏன் இந்த பட்டன்களில் மட்டும் கோர்டு உள்ளது?
விசைப்பலகை (key board) உள்ள நடு வரிசை முகப்பு வரிசை விசை நிலை எனப்படுகின்றது.F மற்றும் J விசைகளில் உங்கள் இடது மற்றும் வலது கைகளை வைத்தவுடன், விசைப்பலகைகை பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
நடுக் கோட்டில் கைகளை சரியான நிலையில் வைப்பதன் மூலம், மேல் மற்றும் கீழ் கோடுகளில் நகர்த்துவது மிகவும் எளிதாகிறது.
இதனால் இடது கை A, S, D மற்றும் F ஆகியவற்றை உள்ளடக்கியது. அதேசமயம், வலது கை J, K, L மற்றும் (;) ஆகியவற்றை குறிப்பதை கைகளால் உணரக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு கை விரல்களை வைக்கும் பட்சத்தில் இரண்டு கட்டைவிரல்களும் ஸ்பேஸ் பாரில் அமைகின்றது.
இதனால் விசைப்பலகையை (key board) பார்க்காமலேயே வேகமாக டைப் செய்ய முடிவதுடன் பார்வையற்றவர்களாலும் இந்த முறையில் இலகுவாக கணினியை பயன்படுத்த முடியும். இதனை நோக்கமாக கொண்டே .F மற்றும் J பட்டன்களில் கோடுகள் இடப்பட்டுள்ளது.