நிறுத்தப்படும் எதிர்நீச்சல் சீரியல் - இந்த முடிவின் காரணம் என்ன?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல டிவி நிகழ்ச்சியில் இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கத்தை எதிர்ந்து போராடும் பெண்கள் என்பதை மைய கருத்தாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் மத்தியில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்திற்கு வெறுப்புடன் கூடிய வரவேற்பு இருந்தது.
அவரின் காமெடி கலந்த நக்கல் பேச்சும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் ஒரு விரும்பியாக இருக்க குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் நல்ல ஹிட்டானது.

இது டிஆர்பியிலும் நல்ல வரவெற்ப பெற்று வந்த நிலையில் இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் மரணம் கடந்த 2023-ம் ஆண்டு இந்த சீரியலுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானதால், எதிர்நீச்சல் சீரியலின் எதிர்காலமும் கேள்விக் குறி ஆனது. இவர் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என சீரியல் குழு சிந்தித்து கொண்டு இருந்தது.
பலகட்ட தேடலுக்கு பின்னர் நடிகர் வேலராம மூர்த்தியை அந்த கேரக்டருக்கு கடைசியாக நடிக்க வைத்தார்கள். இருந்தாலும் மாரிமுத்து அளவுக்கு அவரால் அந்த கேரக்டரை கொடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக இந்த சீரியல் 2024 ம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. இதன்பின்னர் கதைக்களத்தை மாற்றி, கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

நிறுத்தப்படும் எதிர்நீச்சல்
இந்த இரண்டாம் பாகத்தில் கொலை, கடத்தல், தலைமறைவு போன்ற ஒரே மாதிரியான கதைக்களத்தை திரும்பத் திரும்ப காட்டி வருவதால் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பை இழந்து வருகிறது.
இந்த சீரியலில் பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை அடிமைப்படுத்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனால் மக்கள் பலர் இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர். பலரும் இந்த சீரியலை நிறுத்துங்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வருகின்றது. இந்த சீரியலின் மறு ஒளிபரப்பு காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
டிஆர்பியில் வீழ்ச்சி என்பதால் மறு ஒளிபரப்பை நிறுத்த சன் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 2 (திங்கட்கிழமை) முதல் மறு ஒளிபரப்பு இல்லை. இனி சீரியல் இரவு 9.30 மணிக்கு மட்டும் ஒளிபரப்பாகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |