ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பலரும் அறியாத விடயம்
பொதுவாகவே புதிய ஆடை வாங்குவது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆடைகளை தெரிவு செய்வது ஒரு மிகப்பெரும் கலை.
சில பேர் விலை குறைவான ஆடைகளை அணிந்திருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் விலை உயர்ந்த ஆடை போல் தோற்றமளிக்கும்.
இதற்கு காரணம் ஆடைகளை அவர்களின் நிறம் மற்றும் தோற்றத்திற்கு ஏற்றவாறு முறையாக தெரிவு செய்யும் ஆற்றல் தான்.
எப்படியிருப்பினும் நாம் அனைவருமே ஆடைகளை தெரிவு செய்யும் விடயத்தில் நிச்சயம் ஈடுப்பட்டிருப்போம்.
நாம் ஆடைவாங்கும் போது நமது அளவு என்ன என்பது குறித்த கேள்வியும் கட்டடாயம் எழும் அவ்வாறு அளவுகளை தெரிவு செய்யும் போது ஆடைகளில் XL, XXL என்று எல்லாம் வார்த்தைகள் பயன்படுதத்ப்படுகின்றது.
அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பதே அர்த்தம். இது பலருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?
ஆடைகளின் அளவுகளில் குறிப்பிடப்படும் ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பதன் சுருக்கமாகவே குறிப்பிடப்படுகின்றது.
XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையுமே சுருக்கமான முறையில் குறிப்பிடுகின்றது.
பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை காணப்படுகின்றது.
இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை காணப்படுகிdன்றது.
இதே போன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் சுருக்கமாக குறிக்கின்றது.
ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமான ஆடைகளில் உலகளாவிய ரீதியில் இந்த குயியீடு தான் பயன்படுத்தப்படுகின்றது.