30 ஆண்டுகளுக்கு பின் சனியால் ராஜ யோகம் இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.

அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார். அதனால் சனி பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். ஜோதிடத்தின்படி, சனி பகவான் இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி மாலை 7:13 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனம் ஆகவுள்ளார். குறித்த அரிய நிகழ்வு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம் பெறுவகின்றது.

அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், இருவரை இல்லாத அளவுக்கு அதிர்ஷ்ட பலன்களை வாரிக் குவிக்கப்போகும் டாப் 3 ராசியினர் யார் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு

மீன ராசியில் சனி அஸ்தமனம் ஆவதால் தனுசு ராசியினர் வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல மாற்றங்கள் நிகழவுள்ளது.
குறிப்பாக இவர்களின் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கும். அரசு ஊழியர்கள் விரும்பிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருபவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் அஸ்தமனம் பொருளாாதார ரீதியாக பெரும் ஏற்றத்தை கொடுக்கப் போகின்றது.
இதுவரையில் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும். இதனால் பழைய கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
சொத்து தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும். மொத்தத்தில் சனியின் இந்த அஸ்தமனம் கும்ப ராசியினர் வாழ்க்கையில் பொற்காலமாக அமையும்.
மீனம்

சனி மீன ராசியில் அஸ்தமனம் ஆகுவது மீன ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் புகழையும் கொடுக்கப்பதுடன், பணியிடத்தில் மரியாதையும் உயரும்.
குடும்பத்தின் நிலவிவந்த நிதிப் பிரச்சினைகளுக்கு எளிய முயையில் தீர்வு கிடைக்க ஆரம்பிக்கும். பழைய கடன்களை நீங்கள் திருப்பிச் செலுத்துவதற்காக வாய்ப்புகள் தானாகவே அமையும்.
வீடு, தங்க நகைகள் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கூடிவரும். பொருளாதார ரீதியில் இதுவரை இல்லாத வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |