சிறுவயது பிள்ளைகளை குறி வைக்கும் இளநரை வேருடன் இல்லாமாக்கும் சில உணவுகள்!
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு இளநரை பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
சுமாராக 15 வயது துவக்கம் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த இளநரை பிரச்சினை இருக்கும்.
மேலும் சிறுவர்களுக்கு இப்படியான ஒரு நிலை பரம்பரை வழியாக அல்லது தவறான உணவு பழக்கங்கள் மூலம் வருகின்றது. இளைஞர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தால் ஏற்படும்.
மேலும் மயிர்க்கால்கள் அல்லது தோல் அடுக்கில் உள்ள சிறிய நுண்ணறைகள் மெலனின் உள்ளது.
காலப்போக்கில் மயிர்க்கால்கள் நிறமி செல்களை இழக்கப்படுகின்றது இதன் விளைவாக கூட முடி நரைத்துவிடலாம்.
எந்த வைட்டமினால் தலைமுடி கருப்பாக இருக்கின்றது?
உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டால் தலைமுடி வெள்ளையாக மாறும் என கூறுவார்கள் அது உண்மை தான். வைட்டமின் பி-6, பி-12, பயோட்டின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகிய ஊட்டசத்துக்களில் குறைபாடு ஏற்பட்டால் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும்.
இதனால் இது போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்வது அவசியமாகும். வைட்டமின் D-3, வைட்டமின் B-12 மற்றும் தாமிரம் மற்றும் நரை முடியுடன் அதிக தொடர்புடையது என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.
வெள்ளை முடியை கருப்பாக்குவது எப்படி?
நரை முடி இருந்தால் உடலுக்கு வைட்டமின் பி12, பி6 போன்ற சத்துக்கள் நிறைந்த ஆகாரங்களை கொடுக்க வேண்டும்.
மேலும் தலைமுடியை பராமரிக்கும் சில உணவுகளை தினமும் எடுத்து கொண்டால் காலப்பபோக்கில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கியமா?
தலைமுடி பாதுகாக்கும் உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு முக்கியம் பெறுகின்றது.
* ஃபிரெஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள்
* கிரீன் டீ குடிக்கவும்
* ஆலிவ் எண்ணெய்
* மீன் வைட்டமின்
குறைபாட்டை எப்படி போக்குவது?
- வைட்டமின் பி12 - கடல் மீன், முட்டை, இறைச்சி
- வைட்டமின் D - பால், சால்மன் மற்றும் சீஸ்
- வைட்டமின் ஈ - ஆலிவ் எண்ணெய், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |