தலைமுடியை வளர வைக்கும் 5 அற்புத உணவுகள்: தினமும் சாப்பிடுங்க
இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் தான்.
இளநரை, முடி கொட்டுதல், வழுக்கை, அடர்த்தியில்லாமல் இருத்தல், பொடுகு தொல்லை என பல பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தலைமுடி வளர்வதற்கு மிக முக்கிய காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளே, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே நமது ஆரோக்கியம் மேம்படும்.
தினமும் 6 முதல் 8 மணிநேரம் உறக்கம், 8 டம்ளர் தண்ணீர், மன அழுத்தம் இல்லாமல் இருப்பதே பாதியளவு பிரச்சனைகளை தீர்த்துவிடும்.
இதுதவிர தினமும் நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
புரோபயாடிக் நிறைந்த உணவுகள்
என்னதான் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் குடலின் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே செயல்பாடுகள் சீராக இருக்கும்.
எனவே குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தயிர், மோர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர் அருந்துவது குடலின் நல்ல பக்டீரியாக்கள் வளர ஊக்குவிக்கும்.
இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உணவில் உள்ள சத்துக்களை கிரகித்துக் கொள்ள உதவுகிறது.
முட்டை
Rozi Pottsy
தேகம் வலுப்பெற பலரும் பரிந்துரைக்கும் உணவுகளில் முக்கியமானது முட்டை, ஏனெனில் இதில் அதிகளவான புரதச்சத்து நிறைந்துள்ளது, வைட்டமின் டியும் இருப்பதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.
தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது முடி வளர்ச்சியை தூண்டுவதுடன் பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மை காக்கும்.
மிக முக்கியமாக இதிலுள்ள நல்ல கொழுப்புகள் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் முக்கியமாகிறது.
கீரைகள்
கீரைகளின் பயன்களை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை, வாரத்திற்கு குறைந்தது 3 நாளாவது கீரையை எடுத்துக் கொண்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.
மிக முக்கியமாக ரத்தத்தை சுத்தமாக்கி உடல் உள்ளுறுப்புகளை சீராக்குவதில் கீரைகளில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
உடல் சுத்தமானாலே நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளின் பலன்களை நம் உடல் பிரதிபலிக்கும்.
இதுவே உங்களை என்றென்றும் இளமையாக வைப்பதுடன் தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.
முழு தானியங்கள்
முழு தானியங்களில் கார்போஹைட்ரேட்கள், உயிர்சத்துக்கள், தாது உப்புகள், புரதம் மற்றும் அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.
தோசை, இட்லி என காலை உணவுடன் துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதும், மாலை நேரங்களில் கொண்டைக்கடலை, சுண்டல் என ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வதும் உடலை ஆரோக்கியமாக்கும்.
நட்ஸ்
சூப்பர் உணவுகள் என்றழைக்கப்படும் நட்ஸை தினந்தோறும் எடுத்துக் கொள்வது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.
வால்நட், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இவை சருமத்திற்கு அவசியமான ஒன்று, முடி வளர்ச்சியையும் தூண்டும்.
வைட்டமின் ஈ சருமத்தை இளமையாக வைப்பதுடன் மன அழுத்தத்தை போக்குகிறது, இதனால் முடி வளர்ச்சி சீராக இருக்கும்.