சூரிய ஒளியால் வைட்டமின் டி முழுமையா கிடைக்கும்.. அதை பெற சரியான நேரம் எது தெரியுமா?
நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவையாக இருப்பது வைட்டமின் டி சத்து. இவற்றினை நாம் சுரிய ஒளியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வைட்டமின் டி
எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமாக தேவைப்படுகின்றது.
நமது உடலின் கால்சியம், பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவுகின்றன.
வைட்டமின் டி எவ்வாறு பெறலாம்?
சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி சத்துக்களை பெறுவதற்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் சுமார் 5 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை பெற வேண்டும்.
சூரிய ஒளியில் நமது முகம், கை, கால்கள் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் உங்களால் வெயிலில் நிற்க முடியவில்லை என்றால், இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக நிற்க வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான நேரத்தில் தான் சூரிய ஒளியில் இருந்து அதிக வைட்டமின் டி வெளிப்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் தீவிரத்தைப் பொறுத்து நேரம் மாறுபடலாம்.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் வைட்டமின் டி அதிகமாகவே நமக்கு கிடைக்கின்றது. மேலும் கருமையான சருமம் கொண்டவர்களுக்கு இந்த சத்துக்களை உறிஞ்ச சற்று நேரமாகுமாம்.
மேகமூட்டமாக இருக்கும் நாளில் எப்பொழுதும் கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்காமல் அளவு குறைவாகவே கிடைக்குமாம்.