இரவில் தூங்கும் போது உங்கள் உடல் என்ன செய்யும்?
ஒரு மனிதன் பகல் முழுவதும் அயராது உழைத்து விட்டு உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் இரவில் உறங்குகிறான். அதனால் ஒரு மனிதனுக்கு 8 மணிநேரம் தூங்குவது கட்டாயம் எனச் சொல்லப்படுகிறது.
8 மணி நேரம் தூக்கம் இல்லையெனில் அவனது ஆரோக்கியம் பாதிப்படையும். ஆனால் நாம் தூங்கும் போது நமது உடல் என்ன செய்கிறது, நமது உடலில் என்னென்ன மாற்றம் நடக்கிறது என்று யோசித்திருக்கிறோமா?
எப்படி தூக்கம் வருகிறது?
எமது மூளையில் உறக்க மையம் ஒன்று உள்ளது இது ரத்தத்தில் உள்ள கல்சியத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது உறக்க மையத்திற்கு தேவையான கல்சியம் கிடைத்த உடன் எமக்கு தூக்கம் வருகிறது. அதேபோல தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தூங்குவதற்கான கல்சியத்தை கொடுத்தால் தூக்கம் வருமாம்.
உறக்க மையத்திற்கு நேரடியாக கல்சியம் செலுத்தினால் தான் தூக்கம் வரும் இரத்தக் குழாயில் செலுத்தினால் தூக்கம் வராது.
தூக்கத்தில் என்ன நடக்கும்
நாம் தூங்கும் போது இந்த உறக்க மையம் இரண்டு விதமாக செயல்படுகிறது. முதலாவதாக உறக்க மையத்தின் இயக்கம் ஏனைய உறுப்புகளிலிருந்து கூளையின் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.
மற்றொன்று உடலில் இருக்கும் ஏனைய உறுப்புக்களை தடுத்து செயல்பட வைக்கிறது. நாம் உறங்கும் போது நமது மன ஆற்றலும், உணர்ச்சியும் தற்காலிகமாக நிலைத்து போகும்.
நாம் தூக்கத்தில் இருக்கும் போது நமது உடல் பல அசைவுகளை கொடுக்கும். அதாவது நாம் தங்கும் போது சராசரியாக 20 முதல் 40 தடவை புரண்டு படுக்கிறோம். அதனால் இரத்த ஓட்டம் தொடர்ந்தும் நடந்துக் கொண்டே இருக்கும்.
இதயத் துடிப்பானது சற்று குறைவாக இருக்கும், உணவை ஜீரணிக்கும் உறுப்புகள் சீராக இயங்கும். அதே போல சிறுநீரகமும், ஈரலும் தொடர்ச்சியாக செயலாற்றும்.
உடல் வெப்பம் குறைவடையும்.
மேலும், உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றும் வேலைகள் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது வேகமாக நடைபெறும்.