தினமும் காலையில் தூங்கி எழும்புவதில் சிரமமா? இதை செய்து பாருங்க
அதிகாலையில் கண் விழிக்க வேண்டும் என்று தான் அனைவரினதும் ஆசை... ஆனால் அது சரியாக கடை பிடிக்கப்படுவதில்லை.
அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? சரியான திட்டமிடல் இல்லை மனநிலையில் குழப்பம் இவ்வாறு இன்னல்கள் காணப்படும் பட்சத்தில் சரியான தூக்கம் இல்லாததால் அதிகாலையில் நித்திரை விட்டு எழுவதில் சிரமம் தான் வரும்.
ஆகவே அதிகாலையில் கண்விழித்து எழும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்....
மூளைக்கு சொல்ல வேண்டும்
அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்துக் கொள்ள வேண்டும் என்று மூளைக்கு கூற வேண்டும். அப்போழுது தான் மூளை தன்னை செயற்பட வைக்கும்.
சூரிய ஒளி
உங்கள் படுக்கை அறைக்கு சூரிய ஒளி வரும் வகையில் அமைத்தல் வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சம் அறைக்குள் வந்தால் தூக்கம் கலைந்து அதிகாலையில் நித்திரை விட்டு எழுவீர்கள்.
ஒரே இடத்தில் தூங்க வேண்டும்
தினமும் ஒரே இடத்தில் தூங்க வேண்டும். தினமும் இடமாறினால் தூக்கம் கலையும். ஆகவே ஒரே இடத்தில் தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.
காற்றோட்டமான இடம்
இரவில் காற்றோட்டமான இடத்திலேயே உறங்க வேண்டும். அவ்வாறு உறங்கினால் தான் தினமும் தூக்கம் விட்டு எழுந்துக் கொள்ள முடியும்.
தினமும் 8 மணிநேரம் தூங்கினால் உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.