நடிகை கனிகா எதிர்நீச்சல் சீரியலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கனிகாவின் சம்பளவிபரம் வெளியாகியுள்ளது.
நடிகை கனிகா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல். இது முதல்பாகம் முடிந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது.
முதல் பாகத்தைப் போன்றே வீட்டு ஆண்களிடம் சிக்கி பெண்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் குணசேகரன் மனைவியாக நடித்துள்ளார்.
கடந்த நாட்களில் கதை சில மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது குணசேகரன் ஈஸ்வரியை அடித்துப் போட்டுவிடுகின்றார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈஸ்வரி மருத்துவமனையில் இருக்கின்றார்.
குணசேகரன் செய்த இந்த காரியம் அறிவுக்கரசியிடம் காணொளியாக இருக்கின்றது. தற்போது ஈஸ்வரியை ஜனனி தான் கொலை செய்ய முயற்சித்தார் என்று வழக்கை திசைதிருப்பவும் செய்கின்றனர்.
இந்த பரபரப்பிற்கு மத்தியில் ஈஸ்வரி குறித்த சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் குறித்த சீரியலில் நடிப்பதற்கு நாள் ஒன்றிக்கு ரூபாய் 12 ஆயிரம் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகின்றது.