வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்: இவ்வளவு தீமைகள் இருக்கின்றதா?
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் உடலில் பல தீமைகளைக் கொண்டு வரும்.
வாழைப்பழம்
நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.
வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி உள்ளவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதனில் இருக்கும் பாதிப்பு குறையும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம்
காலையில் எழுந்த பின்னர் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது கிடையாது. வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை அளவு நமக்கு சக்தி அளித்தாலும் அது சில மணிநேரத்தில் உறிஞ்சி விடும்.
மேலும் இது காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழமாக இருந்தாலும், அதனை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வாழைப்பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை குடல் இயக்கம் பாதிக்கப்பட்டு சக்கரையும் அமிலமும் இணைந்து குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் காலையில் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல பிற பழங்கள் உண்ணும்போது சேர்த்து கலவையாக இதனை உண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பட்சத்தில் அதிலிருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் கலக்கும். இதனால் ரத்தத்தில் சமநிலையின்மை ஏற்பட்டு அதன் தாக்கம் இதயத்தில் ஏற்படும்.
இதனால் இதய ஆரோக்கியம் பாதிப்படையும்.
எனவே காலையில் எழுந்ததும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் மற்ற பழங்களுடன் சேர்த்து உண்ணுங்கள்.