மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதய நோய் பாதிப்பு ஏற்படும் ஜாக்கிரதை
அதிகமான சத்துக்களைக் கொண்ட மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மட்டன்
அசைவ பிரியர்களில் பெரும்பாலான நபர்கள் சிக்கனை விட மட்டனை தான் அதிகமாக விரும்புகின்றனர். உடலுக்கு அதிகமான சத்துக்களை வழங்கும் இறைச்சியான மட்டனை வாரத்தில் ஒரு தினமாவது வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் நன்மைகள் ஏராளம் என்று தான் கூற வேண்டும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து மட்டனில் நிறைந்து காணப்படுவதுடன், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனை அளிக்கின்றது.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக நிறைவுள்ள கொழுப்பு இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நிறைவுறா கொழுப்பு இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, நல்ல கொழுப்பின் அளவு உயர்ந்து ஆரோக்கியத்தை பராமரிக்கின்றது. ஏனெனில் மட்டனில் நிறைவுறா கொழுப்புகள் அதிகம் உள்ளதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், கண்பார்வையையும் மேம்படுத்துகின்றது. மட்டனில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்குவதுடன், உடனடி ஆற்றலையும் அளிக்கின்றது.
யார் சாப்பிடக்கூடாது?
தினமும் மட்டன் சாப்பிடுபவர்கள் 250 கிராமுக்கு மேல் ஆட்டிறைச்சி உண்ண வேண்டாம். உடலில் ஏற்கனவே 200mg-க்கு மேல் கொலஸ்ட்ரால் அளவு இருப்பவர்வர்கள் மட்டன் உண்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |