ஆளி விதைகளின் அதிசய ஆரோக்கியம்: ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடனும்?
ஆளி விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.
இதை உணவாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாகும். இந்த ஆளிவிதைகளை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆளி விதைகள்
ஆளி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி ஆளி விதைகளை உட்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வறுத்தோ அல்லது தண்ணீரில் ஊறவைத்தோ ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த விதைகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்க ஆளி விதைகளை சாப்பிடலாம். இது தவிர, ஆளி விதைகள் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும்.
இது தவிர இது மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். எடை இழக்க ஆசைப்படுபவர்கள் இந்த ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது நல்லது. நீரழிவு நோயாளர்களுக்கு இந்த ஆளி விதைகள் மிகவும் நன்மை தரும்.
எலும்புகள் வலுப்பெற இந்த விதைகளை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வளவு நன்மை இருந்தாலும் இதை அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்கு பதிலாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |