நினைவாற்றலை அதிகப்படுத்தும் உணவுகள்: இதை சாப்பிட்டால் எதையும் மறக்கவே மாட்டீங்க
பொதுவாகவே உடலின் ஏனைய செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பது மூளை தான். மனிதனின் மூளை சரியாக செயற்பட்டால் தான் அவன் சரியான நிலையில் இருக்க முடியும்.
கல்விகற்கும் போதும் சரி வேலைக்கு சென்ற பின்னரும் சரி நினைவாற்றல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாக கருதப்படுகின்றது.
சிலருக்கு அதிகமாக மறதி காணப்படும். மிகவும் சிரமப்பட்டு படிக்க கூடியவர்களும் கூட இந்த நினைவாற்றல் குறைப்பாடு காரணமாக பரீட்சையில் போதிய புள்ளிகளை பெற முடியாமல் போகின்றது.
வேலையிலும் சிறப்பாக செயற்பட முடியாமைக்கு இந்த நினைவாற்றல் குறைப்பாடு காரணமாக அமைகின்றது.
நினைவாற்றல் குறைப்பாடு இன்று பலருக்கும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கின்றது.
இதற்கு பிரதான காரணம் தவறான உணவுப்பழக்கவழக்கம் தான். நினைவாற்றலை அதிகரிக்க எந்த உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ளூ பெர்ரி
ப்ளூபெர்ரியில் அழற்சி எதிர்ப்பு பன்புகள் நிறைந்த காணப்படுகின்றது. இது மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும், முதுமை காலத்தில் மறாதி ஏற்படாமல் தடுக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
ப்ரக்கோலி
மூளையின் செல்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் உணவுகளில் ப்ரக்கோலி முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் வைட்டமின் கே சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றது.நினைவாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றது.
காபி
காபி மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் என பலராலும் நம்பப்படுகின்றது. ஆனால் காபி குடிப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது கிடையாது. இருப்பினும் இதில் உள்ள காபின் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
ஃபேட்டி மீன்கள்
சால்மன் உள்பட ஒரு சில மீன்கள் ஃபேட்டி மீன்கள் என அழைக்கப்படுகின்றது. இதில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள், மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாப்பதுடன் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றது.
தர்பூசணி விதைகள்
தர்பூசணி விதைகளில் ஜிங், மாக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் செறிவாக காணப்படுகின்றது. இது மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
மஞ்சள்
மஞ்சள், மூளை செயல்பாடுகள் மட்டுமன்றி உடலின் சுறுசுறுப்பான வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. இது, புதிய மூளை நரம்புகளை சீர் செய்வதிலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |