இந்த 4 தவறுகளை செய்பவர்களுக்கு நிச்சயம் நரகம் தான்... எச்சரிக்கும் சாணக்கிய நீதி!
தனது அறிவாற்றல் மற்றும் தெளிந்த சிந்தனையபல் உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் மனிதர்களை நரகத்துக்கு கொண்டுசெல்லும் செயல்கள் என குறிப்பிட்ட சில விடயங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றது.
மரணத்திற்குப் பிறகு ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பது ஒருவர் வாழும்போது செய்யும் செயல்களே தீர்மாணிக்கின்றன. சாணக்கியரின் கூற்றுபடி மனிதர்கள் ஒருபோதும் செய்யவே கூடாத செயல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தீய செயல்களை செய்பவர்கள்
உறவினர்களை வெறுப்பவர்களையும், பெரியவர்களை அவமதிப்பவர்களையும் சாணக்கியர் தீயவர்கள் என அடையாளப்படுத்துகின்றார்.தீயவற்றை தெரிந்தே செய்பவர்கள் நிச்சயம் நரகத்துக்கு செல்வார்கள்.
பெற்றோரை காயப்படுத்துவர்கள் வாழும் போதும் இறந்த பின்னரும் கடுமையான துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
பெண்களை மதிக்காதவர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பெண்களை அவமரியாதை செய்பவர் மற்றும் உரிய மரியாதை கொடுக்காதவர்கள் நிச்சயம் நரகத்துக்கு செல்வார்கள்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெண்களின் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள் வாழும் போதும் பல்வேறு வகையில் துன்பத்தை அனுபவிப்பார்கள். இறந்த பின்னரும் நரகத்தில் துன்பத்தை அனுபவிப்பார்கள்.
நல்லவர்களை காயப்படுத்துபவர்கள்
தங்களின் வார்த்தைகளாலும், கெட்ட செயல்களாலும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மற்றவர்களுக்கு வலியை கொடுக்க நினைப்பவர்கள் நிச்சயம் நரக வேதனையை அனுபவித்தே தீருவார்கள் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
பேராசை
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பேராசை கொண்ட ஒருவன் ஒருபோதும் யாரையும் மகிழ்விக்க முடியாது.
பணம், சொத்து, மரியாதை பெறுவதற்காகவும் சுயநலத்துக்காகவும் மற்றவர்களை பயன்படுத்திக் கொள்பவர்கள் நிச்சயம் இறந்த பின்னர் நரகத்துக்க செல்வார்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |