இந்த நாட்டில் சிவப்பு lips stick போட்டால் தண்டனையாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே நாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடிப்பணிய வேண்டியது அவசியம். ஆனால் அந்த சட்டம் மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் இருக்கவேண்டியதும் முக்கியம்.
மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் கட்டளையிடுவது சர்வாதிகாரம் எனப்படும்.
அந்த வகையில் ஆட்சியாளர் வகுக்கும் விதிகளை சிறிதும் சிந்திக்காமல் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சர்வாதிகார நாடாக வடகொரியா திகழ்கின்றது.
இந்த 21-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அறியப்படுகின்றார்.
இவர் தனது நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய ஃபேஷன் விடயங்களிலும் கூட தலையீடு செய்கின்றார்.
வடகொரிய மக்கள் எவ்வாறான அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் பல கட்டளைகளை விதித்துள்ளார். Kim Jong-un விதிகளை அந்நாட்டு மக்கள் பின்பற்றவில்லை என்றால், கடுமையான தண்டனையும் கொடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் அந்த நாட்டில் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பல மேக்கப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுகள்ளதுடன் வட கொரியாவில் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோடிக்கணக்கான பெண்களால் மிகவும் விரும்பப்படும் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளரான Kim Jong-un சிவப்பு நிறத்தை முதலாளித்துவம் மற்றும் தனித்துவத்துடன் தொடர்புடையதாக கருதுவதனால் இந்த தடையை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிள்றது.
அந்த வகையில் அந்நாட்டு அதிபர் சிவப்பு உதட்டுச்சாயத்தை முதலாளித்துவத்தின் அடையாளமாக கருதுகிறார். சிவப்பு நிறம் தன்னை விட பெரியவர் இல்லை என்ற உணர்வை குறிப்பதாக அவர் நம்புகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் கிம் ஜாங் உன் தனது நாட்டில் வசிக்கும் எந்த நபரும் ஆட்சியாளரை விட அதாவது தன்னை விட பெரியவராக இருக்க கூடாது எப்பதற்காக ரெட் கலர் லிப்ஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |