வெங்காயம், பூண்டு சாப்பிட தடையா! என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே இந்திய உணவுகளில் வெங்காயம், பூண்டு முக்கிய இடம் வகிக்கின்றது என்றால் மிகையாகாது. இந்த பொருட்கள் இல்லாமல் சமையலா? என்று சொல்லும் அளவுக்கு சமையலில் அதன் பங்கு இன்றியமையாதது.
ஆனால்,இந்தியாவில் ஒரு நகரத்தில் மட்டும் வெங்காயம் மற்றும் பூண்டு வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும், பயிரிடுவதற்கும் ஏன் உணவகங்களில் பரிமாறுவதற்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரத்தில் தான் இந்த தடை அமுலில் இருக்கின்றது. இது உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது ஆன்மீகத்துக்கு பெயர் பெற்ற நகரம். இது ஜம்மு நகரத்திற்கு அருகில், 42 கி.மீ தொலைவில் காணப்படுகின்றது.
ஆன்மீக நகரம் என்றாலும் அசைவத்துக்கு தடை விதிப்பது சரி, ஏன் இங்கு வெங்காயம் பூண்டுக்கு தடை விதிக்கப்பட்டுளது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

என்ன காரணம்?
கத்ரா நகரில் ஏன் வெங்காயம், பூண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டுமானால் முதலில் ஆயுர்வேதத்தின் பிரகாரம் உணவுகளின் முக்கிய 3 பிரிவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
1. சாத்வீகம்
ஆயுர்வேதத்தின் படி தூய்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் உணவுகள் சாத்வீகம் என்ற பிரிவில் அடக்கும். பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவை அதில் அடங்கும்.
2. ராஜஸிகம்
உடலில் செயல்பாடுகளையும் ஆர்வத்தையும் தூண்டும் அதாவது மொத்தத்தில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் உணவுகள் இந்த பிரிவின் கீழ்வரும். உதாரணமான காரணமான உணவுகள், காபி போன்றவற்றை குறிப்பிடலாம்.
3.தாமஸிகம்
உடலில் மந்த நிலை, சோர்வு மற்றும் அறியாமையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் இந்த பிரிவில் அடங்கும். உதாரணமாக பழைய உணவுகள், இறைச்சி வகைகள், மதுபானம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

எனவே தான் தீவிரமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தக்கூடிய சாத்வீக உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் ராஜஸிகம் என்ற பிரிவின் கீழ் வரும் வெங்காயம் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் தூண்டக்கூடியது.
மேலும் தாமஸிகம் என்ற பிரிவில் வரும் பூண்டு உடலில் மந்தம் மற்றும் அதிக கோபத்தை தூண்டும் எனவே தான் இந்த ஆன்மீக சிறப்பு வாய்ந்த கத்ரா நகரில் வெங்காயம் மற்றும் பூண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |