Whatsapp-ல் Spam Message தொல்லையா? இதோ அதற்கான புதிய தீர்வு!
தற்போது Whatsapp பயன்படுத்தாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
தொலைபேசி வைத்திருக்கும் அனைவரின் தொலைபேசியிலும் Whatsapp இருக்கும். அந்தளவு Whatsapp மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பயனர்களின் தேவைகளை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றால் போன்று மெட்டா நிறுவனம் Whatsapp-ஐ அப்டேட் செய்து வருகிறது.
தற்போது Whatsapp பயனர்கள் அதிகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் Spam Message பெரும் பிரச்சினையாக உள்ளது. இது சில சமயங்களில் எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய வகையில் வரும்.
ஆகையால், Spam Message-க்கு தீர்வுக்கட்ட நினைக்கும் மெட்டா நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அப்படியாயின், மெட்டா நிறுவனம் Spam Message-ஐ இல்லாமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Whatsapp-ன் புதிய அப்டேட்
Whatsapp பலரின் வாழ்க்கையில் இன்றியமையாத செயலியாக மாறி விட்டது. இன்னும் சிலர் இதனை ஒரு ஊடகமாக பயன்படுத்தி வியாபாரமும் செய்து வருகிறார்கள்.
டெலிவரி அப்டேட்டுகள் அல்லது அவர்களுக்கு விருப்பமில்லாத ஆஃபர்கள் போன்ற Spam Message-களை கூட அனுப்பலாம். அதே சமயம், உங்களுக்கு Spam Message அதிகமாக வருகிறது என்றால் அதற்கு ஒரு வரம்புகளை அமைப்பதற்கான அதிகாரமும் பயனர்களுக்கு கொடுக்கப்படும் வகையில், Whatsapp அப்டேட் கொடுக்கவுள்ளது.

இந்த புதிய புதிய வழியை Whatsapp செயலி தற்போது சோதனை செய்து வருகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. Whatsapp-ஐ வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் பயனர்கள் ஒரு பயனருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் தாரளமாக அனுப்பலாம். அதே போன்று எச்சரிக்கை மெசேஜ்கள் கூட அனுப்பலாம்.
இந்த திட்டம் Whatsapp Forward Message பிரச்சினையை போன்று வரும் நம்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள மார்க்கெட்களுக்கு Whatsapp Message அனுப்புவதற்கு குறிப்பிட்ட அளவு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |