தொட்டாலே உயிரைப் பறிக்கும் உலகின் ஆபத்தான மரம்! எங்க இருக்குதுன்னு தெரியுமா?
பொதுவாகவே இயற்கையின் சமநிலையை பேணுவதற்கும் உயிரிணங்களின் நிலவுகைக்கும் மரங்கள் இன்றியமையாதது.
புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவது தொடக்கம் இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பது,ஆக்ஸிஜனை வழங்குவதோடு, கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என மரங்கள் உயிர்கோலம் நிலைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேலும், அவை மண் அரிப்பைத் தடுக்கின்றன, நிலச்சரிவுகளைக் குறைக்கின்றன, நிழல் தருகின்றன, மழையை ஈர்க்கின்றன, மற்றும் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக காணப்படுகின்றன.
இத்தனை சிறப்புகளை மரங்கள் கொண்டிருந்தாலும் பக்கத்தில் சென்றாலே உயிரை பறிக்கும் ஒரு மரமும் உலகில் இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றா? ஆம் அப்படி மரண மரம் என்று முத்திரை குத்தப்பட்டு உயிர்களை அச்சுறுத்தும் ஒரு மரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உலகின் ஆபத்தான மரம்
தெற்கு புளோரிடாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கரீபியனின் வடக்குப் பகுதிகளில் செரிந்து காணப்படும் இந்த மரம் மஞ்சினீல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. (ஹிப்போமனே மான்சினெல்லா என்றும் மரண மரம் என்றும் அழைக்கப்படுகிறது)
இந்த மரங்கள் கடற்கரைகளில் அல்லது உப்பு நீரில் அதிகம் வளரக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. அவை கொத்தாக வளரும் மற்றும் சதுப்புநிலக் காடுகளிலும் வளர்வதைக் காணலாம்.

இந்த மரத்தில் இருந்து பெறப்படும் அனைத்துமே கொடிய நச்சுத்தன்மை கொண்டது என குறிப்பிடப்படுகின்றது. அதாவது இந்த மரத்தின் பால் மனிதர்களின் மீது பட்டால் கடுமையாக எரிச்சலையும், சருமத்தில் கொப்புளங்களையும் ஏற்படுத்துமாம்.
இதன் இலைகள் மிகவும் பளபளப்பாகவும், பச்சை நிறமாகவும் இருக்கும். மரத்தின் பட்டை மென்மையாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும். மன்சினீல் மரத்தின் பழங்கள் சிறிய ஆப்பிள்களைப் போலவே இருக்கும்.
ஆனால், இவற்றை சாப்பிடக்கூடாது. இம்மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நச்சுத்தன்மை உடையது. இதன் இலைகள், பழங்கள், பால், பட்டை, வேர்கள் என அனைத்துமே ஆபத்தானவை. மன்சினீல் மரத்தின் நச்சுத்தன்மைக்கு பல காரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் பல வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்த நச்சுப் பொருட்கள் தோலில் பட்டாலே தீக்காயங்கள் போன்ற புண்களை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் பார்வையே பறிப்போகும் அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
இந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் உடனடியாக ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் இறப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |