Bigg Boss: பறிபோனது திவ்யாவின் மேனேஜர் பதவி... ஸ்டாரை தட்டித்தூக்கிய மூன்று போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ காட்சியில் மேனேஜர் பதவியில் இருந்த திவ்யாவை அப்பதவியிலிருந்து தூக்கியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இதில் தற்போது 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் வெளியே இருந்து 4 போட்டியாளர்கள் உள்ளே சென்று கலக்கி வருகின்றனர்.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றதும் உள்ளே இருந்த சக போட்டியாளர்கள் அனைவரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இன்றைய ப்ரொமோ
இன்றைய ப்ரொமோ காட்சியில் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், வெளியே இருந்து மஞ்சரி, தீபக், பிரியங்கா மூன்று பேரும் விருந்தினராக உள்ளே வந்துள்ளனர்.
ஹோட்டல் மேனேஜராக திவ்யா இருந்து வரும் நிலையில், காலையில் விருந்தினரை சரியாக உபசரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்ததால், திவ்யா அனைவரையும் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஹோட்டல் ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துள்ளனர். பின்பு விருந்தினர் ஹோட்டல் உரிமையாளரிடம் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
குற்றச்சாட்டை விசாரித்த போது ஹோட்டல் மேனேஜர் சரியில்லை என்ற புகார் எழுந்ததால், திவ்யாவை மேனேஜர் பதவியிலிருந்து இறக்கியுள்ளனர்.

ஸ்டாரை வென்ற போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள விருந்தினரிடமிருந்து யார் ஸ்டார் பெறுகிறார்களோ அவர்களுக்கு பிக் பாஸ் சலுகை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் முதல் ஸ்டாரை பிரவீன், இரண்டாவது ஸ்டாரை சுபிக்ஷாவும், மூன்றாவது ஸ்டாரை வியானாவும் பெற்று அசத்தியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |