நீங்க வேலைக்கு செல்லும் பெண்ணா? அப்போ இந்த பொருட்களை எப்போதும் பையில் வைத்திருப்பது அவசியம்!
பொதுவாக தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். குடும்ப சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளும் பெண்கள் தங்களின் சுய பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்யது முக்கியம்.
அந்த வகையில் வெளியில் செல்லும் போதும் வேலைக்கு செல்லும் போதும் பெண்கள் தங்களின் பையில் முக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்போதும் வைத்திருக்க வேண்டிய பொருட்கள்
வேலைக்கு செல்லும் போது பெண்கள் நிச்சயம் தங்களின் பைகளில் பாதுகாப்பு ஊசிகளை வைத்திருக்க வேண்டும். காரணம் வெளியே இருக்கும் போது ஆடைகள் சில சமயங்களில் கிழிந்துவிட்டால் இது பெரிதும் உதவியாாக இருக்கும். மேலும் இதை பெண்கள் பாதுகாப்பு நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியும்.
பேருந்தில் அல்லது ரயில் பயணங்களின் போது யாராவது உங்களிடம் அத்துமீறினால் இது உங்களை பாதுகாத்துக்கொள்ளவும் உதவும்.
பெண்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது முக்கியமாக சில பொருட்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அவை தனக்கும் மற்ற பெண்களுக்கும் கடினமான சூழ்நிலைகளில் உதவிபுரியக்கூடியதாக இருக்கும்.
மேலும் பெண்கள் எப்போதும் வெளியில் எடுத்துச்செல்லும் பையில் நாப்கின்கள் சிலவற்றறை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். இது அவசர காலங்களில் உங்களுக்கு மட்டுமன்றி மற்ற பெண்களுக்கும் கூட துணைப்புரியும்.
தற்காலத்தில் பெரும்பாலன பெண்கள் மொடன் உடைகளில் தான் வேலைக்கு செல்கின்றார்கள் இருப்பினும். உங்களுடன் எப்போதும் தாவணி அல்லது ஒரு துப்பட்டாவை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
அதிகமாக வெயில் அல்லது மழை பெய்யும் போதும் அவசர தேவைகளின் போதும் ஒரு துப்பட்டாவை வைத்திருப்பது பல்வேறு வகைகளிலும் உதவியாக இருக்கும்.
வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்களும் சில்லி ஸ்ப்ரேவை அல்லது பெப்பர் ஸ்பிரேவை தங்களின் பையில் வைத்திருப்பதால் தங்களின் சொந்த பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். ஆபத்தில் நேரங்களில் அது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இன்றியமையாதது.
அதுமட்டுமன்றி ரப்பர் பேண்ட், லிப் பாம், மாய்ஸ்சரைசர் மற்றும் லோஷன் போன்றவற்றை தினசரி வேலைக்கு செல்லும் போது எடுத்து செல்ல வேண்டியது அவசியம். இது உங்களை எப்போதும் புத்துணர்வுடன் உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமானது.
வேலைக்கு சென்று இரவில் தாமதமாக வீட்டுக்கு செல்லும் பெண்கள் நிச்சயம் தங்களின் பையில் விசில் ஒன்றை வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
உங்களை யாராவது பின் தொடர்கிறார்கள் என்றாலோ அல்லது ஆபத்தான நிலையை உணர்ந்தாலே விசிலை எடுத்து சத்தமாக ஊதலாம். இது சுற்றியுள்ளவர்களின் ஈர்த்து உங்களை பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கும். இது குறித்து பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடனும் அக்கறையுமனும் செயற்பட வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |