இந்த விடயங்கள் உங்க காதல் உறவில் இருக்கா? இப்போ உடனே அந்த உறவில் இருந்து விலகிவிடுங்க!
பொதுவாகவே காதல் உறவில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பவதும் பின்னர் சமாதானம் ஆவதும் இயல்பான விடயம் தான்.
ஆனால் இதுவே தொடர்ந்தால் இந்த உறவை திருமணம் வரை கொண்டு செல்வது சரியானது தானா என்பது குறித்து இரு முறை சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது.
எந்த உறவாக இருந்தாலும் அது நமது மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருக்கவேண்டுதே தவிர, மகிழ்ச்சியை கெடுப்பதாக இருக்க கூடாது.
அப்படி காதல் உறவில் எந்த மாதிரியான நடத்தைகளை உங்க துணை வெளிப்படுத்தினால் அந்த உறவு உங்களுக்கு பொருத்தமானது இல்லை என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
காதலில் இருக்க கூடாத விடயங்கள்
எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் நிறைந்திருக்கும். காதல் உறவில் இருக்கும் போது உங்கள் துணையால் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வில்லை என்றால் அந்த உறவில் இருந்து விலகிவிடுவதே உங்கள் எதிர்காலத்துக்கு சிறந்தது.
நீங்கள் பேச விரும்பும் அதனை புறக்கணிப்பது, அன்பு, கவலை என எந்தவொரு உணர்வையும் வெளிப்படுத்தும் போது துணையிடம் இருந்து நீங்கள் எதிர்ப்பார்க்கும் எந்த ஆறுதலும் கிடைக்கவில்லை என்றால் அந்த உறவை தொடர்வதில் எந்த அர்தமும் இல்லை.
காதல் உறவில் உங்கள் துணை உங்களை எந்த சந்தர்ப்பத்திலும் பாராட்டவில்லை என்றாலும் எதற்கெடுத்தாலும் உங்களை விமர்ச்சிக்ப்பதையும் குறைகூறுவதையும் தொழிலாக வைத்திருந்தால் இந்த உறவு உங்களுக்கு நிச்சயம் மகிழ்சியை கொடுக்கப்போவது கிடையது என்பதை புரிந்துக்கொண்டு இந்த உறவில் இருந்து விடுப்படுவது நல்லது.
இந்த இடத்தில் இருந்தாலும் நமது சுயமரியாதை என்பது இன்றியமையாதது. உங்கள் துணை உங்களுக்கான மரியாதையை கொடுக்கவில்லை என்றால் எந்த உறவால் எதிர்காலத்தில் நீங்கள் அதிக துன்பத்தை அனுபவிக்க போகின்றீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் துணை நீங்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கும் உங்களை பழிவாங்குவது போல் நடந்துகொள்வது அல்லது நீங்கள் தவறுதலாக செய்த ஒரு விடயத்தை வேண்டுமென்றே உங்களுக்கு திருப்பி செய்து துன்பம் கொடுப்பது போன்ற செயல்களை செய்தால் கொஞ்சமும் தயங்காமல் இந்த உறவில் இருந்து வெளிவரபாருங்கள். இந்த துணை ஒருபோதும் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப்போவது கிடையாது.
பழைய பிரச்சனைகளை சண்டைவரும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பேசும் வழக்கத்தை உங்கள் துணை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்த உறவு உங்களுக்கு சரியானது அல்ல என்பதை புரிந்டுக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |