32 வயதுக்குள் பெண்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா?
பொதுவாகவே சமூக கட்டமைப்புகளின் பிரகாரம் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் இன்றும் கூட பல கட்டுப்பாடுகளுக்கும் வரையரைகளுக்கும் உட்பட்டு வாழ வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.
இந்நிலையில் 30 வயதை கடக்கும் போது பெரும்பாலாக பெண்கள் வாழ்ககையில் எதையும் சாதிக்கவில்லை என்ற மனநிலையில் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
பெண்களை கொருத்தவரையில் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை குடும்பத்தினர் முன்வைப்பது வழக்கம்.
இதன் பின்னர் திருமண வாழ்வில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிப்பதால் 30 வயதை கடக்கும் போது பெண்களின் மனதில் இனம் புரியாத ஒரு பயம் ஏற்படுவது வழக்கம். இது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வின் விளைவாகவே ஏற்படுகின்றது.
இவ்வாறான விடயங்களை பெண்கள் தவித்து எப்போதும் மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 32 வயதுனக்குள் குறிப்பிட்ட சில விடயங்கள் பற்றிய பூணை அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம். இவை குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
32 வயதுக்குள் கற்றுக்கொள்ள வேண்டியவை
பெண்கள் 32 வயதை கடப்பதற்கு முன்னரே கட்டாயமாக தங்களின் துறையை தெரிவு செய்திருக்க வேண்டும். அதாவது உங்களின் இலக்கை இந்த வயதிற்குள் நிர்ணயம் செய்திருக்க வேண்டியது அவசியம்.
உங்களின் வாழ்க்கை இந்த வயதை எட்டும் போது உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மகிழ்சியாகவும் சுதற்திரமடாகவும் வாழ வேண்டும் என்றால் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் உரிமை உங்களிடம் இருக்க வேண்டும்.
இந்த வயதை எட்டும் போது உங்களின் சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ள நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இது காதல் உறவாகவும் உறவினராகவும் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சுற்றத்தாரின் உறவாக கூட இருக்கலாம்.
மனிதர்களுக்கு அவ்வப்போது எந்த உறவும் தேவையில்லை என்ற எண்ணம் தோன்றினாலும் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. எந்த மனிதனாலும் உறவுகள் இன்றி மகிழ்ச்சியாக வாழவே முடியாது.
32 வயதை எட்டுவதற்கு முன்னர் நீங்கள் பிடித்த தொழிலை செய்கின்றீர்களா என்பதில் மிகவும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு பிடித்த தொழில் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும் என்பது உறுதி.
அதுமட்டுமன்றி உடல் ஆரோக்கியம் குறித்த தெளிவு மற்றும் உணவுக்கட்டுபாடு என்பவற்றை இந்த வயதுக்குள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனதுக்கு பிடித்த விடயங்களை கற்றுக்கொள்வும் பிடித்த இடத்துக்கு பயணம் செய்யவும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நிச்சயம் நிதி முகாமைத்துவம் குறித்த தெளிவை 32 வயதுக்குள் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.மேலும் எந்த துறையில் முதலீடு செய்வதால் வாழ்கை பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்த பூரண அறிவு இருக்க வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |