அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம்மை ஒருவர் அடக்க நினைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் வீட்டில் இருப்பதற்கும் பொது இடத்தில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. அந்தவகையில் நாம் அதிகமாக இருப்பது அலுவலகத்தில் தான் இங்கே பலரும் பல மாதியாக இருப்பார்கள்.
அதில் நம்முடன் நண்டபர்களாக சிலர் பழகுவார்கள். சிலர் நன்றாக பழகி நமக்கே துரோகம் செய்வார்கள். இப்படி நாம் பலரையும் இங்கே சமாளிக்க வேண்டும்.
அந்த வகையில் நாம் இப்படி அலுவகத்தில் நம்மை மீறி அவர்களிடம் நாம் அடங்கி இருக்க வேண்டம் என நினைப்பார்கள். இது பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனை. இந்த பிரச்சனையை எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
செய்ய வேண்டிய விடயங்கள்
பணியிடத்தில் நம்மை வேண்டுமென்றே சிக்கலில் சிக்கவைத்து நான்கு பேர் மத்தியில் நம்மை நிறுத்தி பதில் சொல்ல வைத்தால் அதற்கு முதலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அந்த இடத்தில் எப்படியும் நாம் தவறு செய்யவில்லை என்றால் கோபம் வரும் ஆனால் அந்த கோபத்தை கட்டுபடுத்தி அமைதியாகவும் நிதானமாகவும் பதில் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்மை யாராவது கோபமூட்டும் வகையில் நம் மீது குற்றச்சாட்டு சொல்லும் போது நாம் முதலில் செய்ய வேண்டியது பொறுமையை இழக்காமல் இருக்க வேண்டும். இதன் பின்னர் உணர்ச்சிவசப்படாமல் வலுவான குரலில் பதில் சொல்ல வேண்டும்.
இப்படி செய்தால் நாம் சொல்வதை மற்றவர்கள் ஏளனமாக பார்க்கமல் செவி சாய்ப்பார்கள். ஒருவர் எம்மிடம் நடந்து கொள்வதற்கு ஒரு வரையறை உள்ளது.
அதையும் தாண்டி உங்களிடமோ இல்லை உங்களை பற்றி வேறொருவரிடமோ விமர்சித்தால் அதற்கு நீங்கள் அவரிடம் முகத்திற்கு நேராக இதுதான் கண்ணியமான எல்லை என்றும் இதை தாண்டி விமர்சிக்க வேண்டாம் என சற்று கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.
நீங்கள் அலுவலகத்தில் யாராவது ஒருவரிடம் காயப்பட்டு இருந்தால் உங்களை போல காயப்பட்டவர்களுடன் நண்பனாகி உங்கள் பிரச்சனையை மேலிடம் வரை கொண்டு செல்ல வேண்டும்.
இது ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் போது அத உங்களுக்கு தவறாக புரிந்தால் அதை பற்றி ஆவணப்படுத்தி வைத்துக்கொள்வது பிற்காலப்பகுதியில் உங்களை காப்பாற்றும். இதை நாம் சரிவர அலுவகத்தில் கடைபிடிக்கும் போது நமக்கான சுயமரியாதை தானகவே கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |