கர்ப்பிணிகளை குறி வைக்கும் சொரியாசிஸ்- எதனால் தெரியுமா?
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்துவார்கள். ஏனெனின் தாயிற்கு ஒரு பாதிப்பு வரும் பொழுது அதன் தாக்கம் குழந்தைக்கும் இருக்கும்.
உதாரணமாக தாயிற்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அதன் தாக்கம் குழந்தைக்கும் இருக்கும். இதனால் தான் மருத்துவமனைகளில் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், குழந்தையின் அறிவாற்றலை அதிகப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பல அறிவுரைகளை வழங்குகிறார்கள்.
கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் வீக்காக இருக்கும் பொழுது குழந்தைக்கு மன அழுத்தம், நோய்த்தொற்றுகள் போன்ற குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இவற்றை தவிர சொரியாசிஸ் போன்ற குணமாக்க முடியாத நோய்களும் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. இது போன்ற நாள்ப்பட்ட நோய்களை கட்டுபடுத்த முடியுமே தவிர, அதனை குணமாக்க முடியாது.
சில மருந்துகளின் பயன்பாடு, மற்றும் மரபியல் போன்ற தூண்டுதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளின் தோலின் செல்களின் வளர்ச்சி அதிகமாகும். அதே சமயம், சொரியாசிஸ் நோய் மரபணு ரீதியாக ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு வர அதிகமான வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில், சொரியாசிஸ் கர்ப்பிணிகளுக்கு வர வேறு என்னென்ன வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சொரியாசிஸ் தாக்கம் எதனால்?
1. சில பெண்கள் வீட்டில் நிம்மதியே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அது கர்ப்பமாக இருக்கும் பொழுதும் தொடரும் பொழுது நோயெதிர்ப்பு மண்டலத்தில் சில கோளாறுகள் ஏற்படும். இதனால் தோல் செல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு சொரியாசிஸ் போன்ற குணமாக்க முடியாத நோய்கள் வருகிறது.
2. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். ஆனால் சில வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பொழுது தான் பலவிதமான மன அழுத்தங்கள் வருகிறது. இதுவும் சொரியாசிஸ் நோய்க்கான முக்கிய காரணமாக பார்க்கலாம்.

3. உங்களுக்கு வேறு நோய்கள் இருக்கும் பட்சத்தில் அது கர்ப்பக்காலத்தில் சொரியாசிஸ் நோயாக மாற்றமடையலாம். எனவே என்ன நோய் இருந்தாலும் அதற்கு உரிய சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். என்ன நோய் இருந்தாலும் அது உங்களின் குழந்தையையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. உங்களது குடும்பத்தில் யாருக்காவது சொரியாசிஸ் நோய் இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கும் நாளடைவில் வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இது போன்று பரம்பரை நோய்கள் இருந்தால் அவர்களை முடிந்தளவு குணப்படுத்த முயற்சிப்பது சிறந்தது. உங்களுக்கு பரிசோதனைகளை எடுத்து கொள்வது நல்லது.

5. கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் நீங்களே மருந்துகடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை வாங்கிக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் சில மருந்துகளின் தாக்கங்கள் காரணமாகவும் இது போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மருந்து வில்லைகளின் தாக்கங்கள் காரணமாகவும் சொரியாசிஸ் நோய் தூண்டப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |