இந்த கஷாயம் குடிங்க.. பனிக்கட்டி போன்று கொழுப்பு உருகி ஓடும்
பொதுவாக தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழுதல், உணவு கட்டுபாடு ஆகிய மூன்றிலும் அதிகமான கவனம் எடுத்து கொண்டால் உங்களுடைய முக்கிய பிரச்சினையாக இருக்கும் தொப்பையை கூட இல்லாமல் செய்யலாம்.
முதலில் உங்கள் உடல் பருமன் அதிகரிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம். சிலருக்கு நோய் நிலைமைகள் காரணமாகவும் உடல் பருமன் அதிகமாகலாம்.
எமது முன்னோர்கள் நம்மை விட அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினை பெரிதாக இருக்காது.
அதே சமயம், அவர்களுக்கு நோய்களும் சற்று குறைவாகவே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் தான். சுவைக்காக உணவு சாப்பிடும் காலம் வந்து விட்டால் பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் கலோரிகள் நிறைந்த துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோம்.

அந்த வகையில், எப்படியாவது எடையை மூன்று மாதங்களில் குறைத்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய கஷாயம் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி - ஒரு துண்டு
- சின்ன சீரகம்- 1 தேக்கரண்டி
- பெரிய சீரகம்- 1 தேக்கரண்டி
- ஒமம்- 1/2 தேக்கரண்டி
- நாட்டு வெல்லம்- 1 துண்டு
பானம் தயாரிப்பு முறை
முதலில் ஒரு துண்டை எடுத்து நன்றாக இடித்து அதிலிருந்து 2 தேக்கரண்டி அளவு சாற்றை எடுத்து தனியாக வைக்கவும்.
அதன் பின்னர் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்து, கொதிக்க விட்டு அதில் சின்ன சீரகம், பெரிய சீரகம், ஒமம் ஆகிய மூன்றையும் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

கடைசியாக அந்த தண்ணீரை ஒரு கப்பில் ஊற்றி, நீங்கள் முதலில் எடுத்து வைத்திருக்கும் இஞ்சி சாற்றை கலந்து கொஞ்சமாக வெல்லம் கலந்து நன்றாக கலந்து விட்டு, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் உங்களுடைய உடல்பருமன் குறையும்.
அதே போன்று இது போன்ற பானங்கள் குடிப்பதற்கு முன்னர் நீங்கள் மருந்து வில்லைகள் எடுப்பவராக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை செய்துக் கொள்வது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |