உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
உடல் எடையை கட்டுக்குள் வைப்பது என்பது அனைவருக்குமே சவாலான ஒரு விடயமாகும்.
உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்தில் இருப்பதை பலரும் இங்கே விரும்புவதில்லை. அதேசமயம் உடலை அளவான எடையில் பராமரிப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவம் முக்கியமானதாகும்.
ஆனால், உணவின் மீது அதிக விருப்பம் இருந்து அதனால் டயட்டில் இருக்க முடியவில்லை என்போருக்கான சில உதவிக்குறிப்புகள் இதோ...
சிலருக்கு எந்நேரமும் ஏதாவதொன்றை சாப்பிட வேண்டும் போலிருக்கும். அந்த சமயங்களில் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகள்தான் நம் உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகின்றது.
எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் குளிர்சாதனப் பெட்டியில் பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான சில உணவு வகைகள் என்பவற்றை வைத்திருக்க வேண்டும். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்...
உயர் புரத தின்பண்டங்கள்
சீஸ், யோகட் என்பவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்திருத்தல் நல்லது. இதை உண்பதால் விரைவில் எடை குறைவதோடு, உண்பதற்கும் நன்றாக இருக்கும்.
பழங்கள்
எடை குறைப்பில் பழங்கள் அதிக தாக்கம் செலுத்துவதால் இனிப்பு பதார்த்தங்களுக்கு பதிலாக இவற்றை உண்ணலாம்.
முட்டை
பொதுவாகவே முட்டை ஆரோக்கியமான ஒரு உணவு. இதைக் கொண்டு பலவிதமான உணவுப் பண்டங்களை செய்துவைத்து உண்ணலாம்.
செலட்
செலட் செய்வதற்கு ஏற்ற காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பது நன்று.
இவ்வாறு உணவை விரும்பியபடி சாப்பிட்டுக்கொண்டே உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.