வித்தியாசமான தர்பூசணி மாக்டெயில் எவ்வாறு செய்வது?
பழங்கள் என்றாலே நிச்சயமாக அதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக கோடைக்காலம் என்றாலே தர்பூசணி பழம்தான் நமக்கெல்லாம் ஞாபத்துக்கு வரும். ஏனென்றால் அதிலுள்ள நீர்ச்சத்து.
நாம் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.
இப்போது சற்று வித்தயாசமான முறையில் தர்பூசணி மொக்டெயில் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - keeping the peas
தேவையான பொருட்கள்
தர்பூசணி (பொடியாக நறுக்கியது) - 2 கப்
சர்க்கரை - 1 கரண்டி
சோடா - 1 கப்
எலுமிச்சை - 1
புதினா இலை - 8
ஐஸ் கட்டிகள் - 3 துண்டு
image - red megazine
செய்முறை
முதலாவதாக தர்பூசணியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தின் சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து அதில் புதினா இலைகள், சர்க்கரை என்பவற்றை போட்டு ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் சிறிதாக நறுக்கிய தர்பூசணி துண்டுகளைச் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
புதினா உள்ள கண்ணாடி டம்ளரில் கால்பாகம் ஐஸ் கட்டி சேர்த்து, வடிகட்டி வைத்துள்ள தர்பூசணி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றையும் ஊற்றிக்கொள்ளவும்.
இறுதியாக சோடாவை சேர்த்து, புதினா இலை மற்றும் தர்பூசணி துண்டுகள் சேர்த்தால் தர்பூசணி மொக்டெயில் ரெடி.
image - taste