செய்யும் போதே மணக்கும் புதினா சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
புதினா சட்னி இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
கீழே புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து செய்து சுவையுங்கள்.
நீரிழிவு நோய் ஆயுசுக்கும் வரக்கூடாதா? அப்ப இந்த ஒரு கசாயம் போதும்...இனி அடிக்கடி குடிங்க!
தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 8-10
- பூண்டு - 3 பல்
- பச்சை மிளகாய் - 2
- புதினா - 2 கப்
- புளி - 1 துண்டு
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்!
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புதினாவை சேர்த்து, அது சுருங்கும் வரை சில நொடிகள் வதக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய தேங்காய், புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், புதினா சட்னி தயார்.