கோடைக்காலம் வந்தாச்சு.. வேர்க்குரு தொல்லையா? அப்போ ஈஸியாக போக்க ஒரு டிப்ஸ்!
கோடைக்காலம் வந்து விட்டால் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். அதாவது உடம்பில் சூடு அதிகரிக்கும் அதனை குழந்தைகளால் தாங்க முடியாத நிலையில் ஏற்படும்.
இதன் காரணமாக சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக குழந்தைகளை எப்போதும் குளிர்ச்சியாக வைத்து கொள்வது அவசியம்.
இதனால் அவர்களுக்கு முறையான உணவு பழக்கங்கள், இரண்டு தடவைகள் குளிக்க வைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்டாயமானதாகும்.
அந்த வகையில் கோடைக்காலத்தில் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு தடுப்பது என தொடர்ந்து பார்க்கலாம்.
வேர்க்குரு வராமல் தடுக்க வேண்டுமா?
1. பொதுவாக குழந்தைகளுக்கு முதுகு பகுதியில் கோடைக்காலத்தில் வேர்க்குரு தோன்றும். இதனால் குழந்தைகளுக்க அதிகமான தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உலர்ந்த திராட்சை தண்ணீரில் ஊற வைத்து மசித்து கொடுக்க வேண்டும். இரண்டு மாதக் குழந்தை முதல் இந்த ரெமடியை பின்பற்றலாம்.
2. காலை, மாலை என ஒரு தினத்திற்கு இரண்டு தடவைகள் குழந்தைகளை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் சூடு தணியும்.
3. கோடைக்காலத்தில் குழந்தைகளின் தலை அதிக சூட்டுடன் இருக்கும் அதனை கட்டுபாட்டில் வைப்பதற்கு குழந்தைகளின் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விடவேண்டும். இவ்வாறு தேய்ப்பதால் தலை குளிர்ச்சியாக இருக்கும்.
4. குழந்தைகளின் படுக்கைக்கு காட்டன் துணிகளை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் படுக்கை மிகவும் சூடுடன் காணப்படும். காட்டன் துணி குழந்தைகளை சூடுடன் வைத்து கொள்ளும்.