நடைபயிற்சி- மெல்லோட்டம் இரண்டில் எது சிறந்தது? நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
தற்போது இருப்பவர்களில் அதிகமானவர்கள் அதிக எடை பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதிகரிக்கும் போது உடற்பயிற்சியில் எதை தெரிவு செய்வது என்ற குழப்பம் இருக்கும்.
மேலும் உடற்பயிற்சி என பார்க்கும் பொழுது நடைபயிற்சி மற்றும் ஓட்டம் இவை இரண்டும் முக்கியம் பெறுகின்றது.
எந்த விதமான செலவுகளுமின்றி இயற்கையான முறையில் ஆரோக்கியமாக எடையை குறைக்கும் ஒரே வழி இது தான்.
அந்த வகையில் நடைபயிற்சி மற்றும் மெல்லோட்டம் இவை இரண்டிற்கு என்ன வித்தியாசம் இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
மெல்லோட்டம் தொடர்ந்து செய்தால் என்ன நடக்கும்?
- கார்டியோ உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இதயம் பலப்படும்.
- மன ஆரோக்கியம் மேம்படும்
- கவலை மற்றும் மனச்சோர்வை இல்லாமலாக்கும்.
இரண்டில் எது சிறந்தது?
ஒரு மணி நேரத்திற்கு 3 மைல் / 5 கிமீ வேகத்தில் நடப்பது என்று வரையறுக்கப்படுகிறது இதனை கார்டியோ உடற்பயிற்சி என்பர்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதால் இதய நோய்கள், நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் குறைகின்றன.
நடைபயிற்சிக்கு வரும்போது, தீவிர பயிற்சியை மேற்கொண்டால் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இது கலோரிகளை இல்லாமாக்கி நம்மை விரைவில் களைப்படைய வைக்கும். தொடர்ந்து ஓட்டத்தை விட நடைபயிற்சி சிறந்தது.