Super Singer:இலங்கை பெண்ணிற்கு Guest கொடுத்த சிறப்பு பரிசு- கத்தி ஆரவாரப்படுத்திய அரங்கம்
அகதிகள் முகாமில் சாதித்த இலங்கை பெண்ணிற்கு சிறப்பு விருந்தினர் கொடுத்த பரிசு அரங்கத்தினரையே ஆரவாரப்படுத்தியுள்ளது.
சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி கடந்த 10 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது பக்தி சூப்பர் சிங்கர் என புதிய பாணியில் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்ற நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு புதிய ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில், பிரமாண்டமாக ஆரம்பமான சூப்பர் சிங்கர் சீசன் 11 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

இந்த புதிய சீசனில் அனுராதா ஸ்ரீராம், தமன், மிஸ்கின் ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.
மாபெரும் இசை யுத்தம்
இந்த நிலையில், தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புதிய கருவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இந்திய முகாம்களில் வாழும் பெண்ணொருவர் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக முகாம்களில் வாழும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண், தான் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசை உள்ளதாக பேசிய இலங்கை பெண்ணிற்கு மிஸ்கின் உதவிச் செய்வதாக கடந்த மேடைகளில் கூறியிருந்தார். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 11-ல் Radio round சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சுற்றில் பாடிய குறித்த பெண்ணிற்கு சிறப்பு விருந்தினராக வந்த விருந்தினர் அவர் கையொப்பம் இட்ட வாணொலியொன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
இவரின் குரலுக்கு கடந்த எபிசோட்டை விட இந்த எபிசோட்டில் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அநேகமாக இவர் இறுதி வரை வாய்ப்பு உள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |