கல்யாணம் முடிந்த கையுடன் விவேக்கின் மகள் செய்த வேலை என்னனு தெரியுமா?
மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தனது திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் மூலிகை பூ செடிகள் நட்டு, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வழங்கியுள்ளார்.
தேஜஸ்வினி
விவேக் தனது நகைச்சுவை திறமையால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். இவர் சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை முன்மாதிரியாக கொண்டு அவர்களது வழியில் நடந்து காட்டியவர்.
இவர் பல இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் பல லட்ச மரங்களை நட்டு வைத்தார். இப்படி நன்மைகளை சொல்லித்தந்த நடிகர் விவேக் சமீபத்தில் உடல் நலக் குறைவால் இறையடி சேர்ந்தார்.
இந்த நிலையில் விவேக்கின் மகள் தேஜஸ்வினி இன்று பரத் என்கிற வரன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.
விவேக்கின் ஆசைப்படி மணமக்கள் இருவரும் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் மூலிகை பூ செடிகள் நட்டு, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வழங்கினர்.
தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |