ஆயிரம் கோடிகளை தாண்டும் ராம் சரணின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
தற்போது 39 வயதாகும் நடிகர் சிரஞ்சீவின் மகன் ராம் சரணிண் அண்ணளவான சொத்து மதிப்பின் விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
ராம் சரண்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ராம் சரண். இவரின் தந்தை சிரஞ்சீவி ஆவார். இவர் தெலுங்கில் வெளியான சிறுத்தை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சமீபத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மாபெரும் ஹிட்டாகி இதில் இருக்கும் பாடல் ஆஸ்கார் விருது வென்றது. இவர் இந்த படத்திற்கு சுமாா 45 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
2012 ம் உபசனா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இவருக்கு 25000 சதுர அடியில், 40 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமன்றி கொனிடேலா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.
மற்றும் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். இது தவிர ரூட்ஜெட் என்ற விமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ராம் சரண்.
இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் , மெர்சிடஸ் மேபேக் , ஃபெராரி போர்ட்டோஃபினோ மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளன.
இந்த நிலையில் ராம் சரணிண் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 1300 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |