"தலைவர் 171" போஸ்டர் வெளியானது... குவியும் லைக்குகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 வது படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி இணைத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் விமர்சண ரீதியாகவும் வசூல் தீதியாகவும் மாபெரும் ஹிட் கொடுத்தது. 600 கோடி வரை இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பியிருந்து.
தற்போது 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை திருப்திபடுத்தி வருகின்றார்.
இந்நிலையில் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினியின் 171 வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது X தலத்தில் பகிர்நதுள்மை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
#Thalaivar171TitleReveal on April 22 ? pic.twitter.com/ekXFdnjNhD
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |