ராதிகாவுடன் காதல் வயப்பட்ட விஜய்காந்த்: சேராமல் போன காதல் கதை!
தமிழ் சினிமாவில் எத்தனை காதல்களும், காதல் திருமணங்களும் இருப்பது சினிமாவிற்கு புதிதல்ல.
பல காதலையும், காதல் திருமணங்களையும் சினிமா கண்டிருந்தாலும் காதல் பிரிவுகளையும் விவாகரத்துக்களையும் இன்றுவரை சந்திக்கத் தவறியதில்லை. அதேபோல ராதிகாவும், விஜய்காந்தும் காதலித்து சேராமல் போன சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது.
விஜய்காந்த்-ராதிகா காதல்
தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தைப்பிடித்து அதிலே ஆட்சி புரிந்தவர் தான் விஜய்காந்த். கிராமத்து நாயகனாக வலம் வந்த விஜயகாந்தின் சினிமா பாதையையே மாற்றியவர் நடிகை ராதிகா.
இவர்கள் இருவரும் தங்களின் தலையும் அன்பையும் பரிமாறிக்கொண்டு காதலித்து வந்தனர். பல படங்களில் இணைந்து நடித்ததால் தான் இந்த ஜோடி சூப்பர் ஜோடி என்று பெயர் பெற்றது.
ஆரம்பத்தில் கிராமத்து கதாநாயகனாக இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் ரஜினி, கமல், போன்ற ஹீரோக்களுக்கு நிகராக நடித்து பிரபல்யமானார்.
இவர்களின் காதல் கதை சேராமல் போனதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன்.
சேராமல் போன காதல்
விஜய்காந்த்-ராதிகா 'இருவரும் காதலித்ததும், காதல் திருமணம் வரை சென்றதும் உண்மைதான், திருமணத்துக்காக ராதிகா தனது திருமண புடவையை எல்லாம் வைத்துக்கொண்டார்.
ஆனால் ராதிகா ஜாதகப்படி தனக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என்று விஜயகாந்த் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
'இந்த இரண்டில் எது உண்மை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தோன்றியவர் விஜயகாந்த்.
புரட்சிகர வேடங்களில் நடித்து புரட்சிக் கலைஞராக அறியப்பட்டார். காதல் தோல்வியால் மனம் உடைந்த ராதிகா மன உளைச்சலுக்கு ஆளானதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.